உள்ளே ரெய்டு.. வெளியே கமகம வாசம்..திரண்ட தொண்டர்களுக்கு வெஜ் பிரியாணி போட்ட செந்தில் கார்த்திகேயன்!
கோவை : கோவையில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெறும் திமுக பிரமுகரும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவருமான செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் குவிந்துள்ள தொண்டர்களுக்கு வெஜ் பிரியாணி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி உட்பட அவருக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்கள் என 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று தமிழ்நாடு முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர், கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் மட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 22 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
கோவையில், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் ஐ.டி சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த செந்தில் கார்த்திகேயன் கடந்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
செந்தில் பாலாஜியோடு நெருக்கமான இவர் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட ஐ.டி அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து ரெய்டு நடத்தி வருகின்றனர்.

அப்போது அங்கு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்தனர். இதையடுத்து அங்கு குவிந்த திமுக தொண்டர்களுக்கு பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. தொண்டர்கள் அமர்வதற்காக சேர்கள் போடப்பட்டன.
செந்தில் கார்த்திகேயன் வீட்டில் ஐ.டி ரெய்டு தொடர்ந்து வரும் நிலையில், மதிய உணவாக வெஜ் பிரியாணி அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களில் பெரிய பிரியாணி அண்டா கொண்டு வரப்பட்டு, அங்கு நின்ற அனைவருக்கும் வெஜ் பிரியாணி வழங்கப்பட்டது. பாக்கு மட்டை தட்டுகளில் வெஜ் பிரியாணி வாங்கி அங்கேயே அமர்ந்து திமுக தொண்டர்கள் சாப்பிட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications