தாய்க்கு இறுதிச்சடங்கினை செய்த மகள்- வெட்டிக் கொன்ற அண்ணன்.. சொத்துக்காக நடந்த சண்டை!
ராய்ப்பூர்: தாய்க்கு இறுதி சடங்கு செய்த தங்கையை அவரது அண்ணனே வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகே மோடா என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் சுனிச் பாய். இவர் தனது மகள் கீதாவுடன் வசித்து வந்தார். சொத்துக் தகராறு காரணமாக மகன் சந்தோஷ் வர்மா தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் சுனிச் பாய் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். தாயின் விருப்பத்திற்கு ஏற்ப அவரது இறுதி சடங்கை கீதா மேற்கொண்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் வர்மா மற்றும் அவரது மகன் ஆகியோர் கீதாவை கோடாரியால் தாக்கி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சந்தோஷ் வர்மா மற்றும் அவரது மகனை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த கீதாவின் சகோதரி சீதா ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சொத்துத் தகராறு காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் நடந்த போது ஏராளமானவர்கள் இருந்தபோதும், அதனை தடுக்க யாரும் முன்வரவில்லை என்று கீதாவின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிம் பேசிய உறவினர் ஒருவர், கொலை சம்பவம் நடந்த இடத்தில் 15 முதல் 20 பேர் வரை இருந்தனர். ஆனால் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. எல்லோருமே பயந்துவிட்டனர் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications