மத்திய அரசின் பட்ஜெட் அலங்கார அறிவிப்பு.. தமிழக நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது.. ஸ்டாலின்
மத்திய அரசின் பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: மத்திய அரசின் பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கடைசி பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் நடுத்தரவர்க்க மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு ஒர சாரார் எதிர்ப்பும் ஒரு சாரார் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பட்ஜெட் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு
அதில் பொருளாதாரத்தை வளர்க்க மத்திய பட்ஜெட்டில் திட்டம் ஏதும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். மத்திய பாஜக அரசின் பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு என ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

வாக்குறுதிகள் என்ன?
சேமிப்பு பயன்களுக்கு வரி விதித்து இருப்பது மூத்த குடிமக்களுக்கு மனஉளைச்சலை தரும் என்றும் அவர் கூறியுள்ளார். 2014 தேர்தலின் போது வெளியிட்ட வாக்குறுதிகள் என்ன? வெளியிட்ட அறிவிப்புகள் என்ன?

எய்ம்ஸ் இதுவரை வரவில்லை
பா.ஜ.க ஒருமுறை தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை வரவில்லை என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திமுக கண்டனம்
பட்ஜெட்டில் தமிழக மக்களின் நலன் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க., சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏமாற்றம் அளிக்கிறது
பட்ஜெட்டில் அமைப்புசாரா தொழிலாளர் நலனுக்கான திட்டம் ஏதும் இல்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு தீர்வு காணாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் மொத்தத்தில் மத்திய பட்ஜெட் வெறும் அலங்கார அணிவகுப்புகளின் தொகுப்பாகவே உள்ளது என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications