மதுரை: பைக் மீது மோதி முழுதும் எரிந்து போன அரசு பேருந்து: 50 பயணிகள் தப்பினர்
மதுரை: மதுரை, வாடிப்பட்டி அருகே அரசுப் பேருந்து ஒன்று சாலையில் கிடந்த பைக் மீது மோதியதில் பேருந்து மற்றும் பைக் இரண்டும் தீப்பிடித்து முழுதும் எரிந்து போனது.
இந்த விபத்தில் ஓட்டுனரின் எச்சரிக்கையினால் பயணிகள் பேருந்தை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதனால் உயிரிழப்பு ஏற்படவில்லை.
ஈரோட்டில் இருந்து ராமநாதபுரம் நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது கொடைக்கானலில் இருந்து இருவர் பைக்கில் திண்டுக்கல்-மதுரை நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். நான்கு வழிப்பாதை நெடுஞ்சாலையில் பைக் சறுக்கி விட ஜெபஸ்டின் ராஜ், பிரதீஷ் என்ற இரண்டு வாலிபர்கள் கீழே விழுந்தனர். காயமடைந்த இருவரும் பைக்கை நடுரோட்டில் விட்டுவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு வந்தனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அந்த அரசுப் பேருந்தின் ஓட்டுனர் நடுரோட்டில் பைக் விழுந்து கிடப்பதை கவனிக்கவில்லை. பைக்கின் மீது மோதிய வேகத்தில் பைக் பேருந்தின் அடிப்பாகத்தில் சிக்கியது. மேலும் 50 மீட்டர்கள் பைக்கை பேருந்து இழுத்துச் சென்றது. இதனையடுத்து பேருந்தில் தீப்பிடித்தது.
ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இதனைச் சரியான நேரத்தில் கண்டுபிடித்து எச்சரிக்க, பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தை விட்டு கீழே இறங்கி ஓடினர். பலர் தங்களது பொருட்களைக் கூட எடுக்க முடியவில்லை. பைக்குடன், பேருந்தும் முழுதும் எரிந்து எலும்புக் கூடாக மாறியது.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மோட்டார் பைக்கில் வந்து காயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications