வாயை தொறந்தேன்னு வெச்சுக்குங்க.. அவனவன் நாண்டுக்கிட்டு செத்து போயிடுவான்.. மன்சூர் அலிகான் பொளேர்!
சென்னை: "நான் வாயை தொறந்தேன்னு வெச்சுக்குங்க.. ஒருத்தனும் உயிரோடவே இருக்கவே முடியாது.. அவனவன் நாண்டுக்கிட்டு செத்துப்போயிடுவான்.. சூசைட் பண்ணிட்டு செத்துப்போயிடுவான்... ஜனநாயக ரீதியாக போராடிட்டு இருக்கீங்களே, நான் உள்ளே புகுந்து பிரச்சனை எதுவும் ஆயிடக்கூடாதுன்றதுக்காக அப்படியே பொத்திக்கிட்டு இருக்கேன்.. இவங்களை துடைச்செறியணும் அது ஒன்னுதான்" என்று மன்சூரலிகான் ஆவேசமாக கூறியுள்ளார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதில் ஏற்பட்ட கலவரம், வன்முறையை கண்டித்து அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வண்ணாரப்பேட்டையில் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அக்கட்சி சார்பில் மன்சூரலிகான் பேசியதாவது:

நியாயமான பிரச்சனை
"மன்சூரலிகான் வாயை திறந்தாலே, எப்ஐஆர் போட்டுட்டு 10 பேர் வெளியே ரெடியா நிப்பாங்க.,, நான் இந்த மாதிரி பிஸ்கோத்துங்களுக்கு பயப்படுபவன் அல்ல. ஆனால், மக்களின் நியாயமான, தார்மீகமான, ஜனநாயக ரீதியாக இங்கே போராடிட்டு இருக்கீங்களே, நான் உள்ளே புகுந்து பிரச்சனை எதுவும் ஆயிடக்கூடாதுன்றதுக்காக அப்படியே பொத்திக்கிட்டு இருக்கேன்.

இங்கிலிஷ் தெரியாது
இல்லாட்டி நான் வாயை தொறந்தேன்னு வெச்சுக்குங்க, ஒருத்தன் உயிரோடவே இருக்கவே முடியாது.. அவனவன் நாண்டுக்கிட்டு செத்துப்போயிடுவான்.. சூசைட் பண்ணிட்டு செத்துப்போயிடுவான். என்னுடைய ஒரே கோரிக்கை என்னன்னா, இந்த சிட்டிசன்ஷிப், அமெண்ட்மென்ட் ஆக்ட், நேஷனல் சிட்டிசன்ஷிப், சிட்டிசன் சிட்டிசன்ஷிப், இன்னும் என்ன இருக்கோ.. அவங்களுக்கு ஏபிசிடி-யே தெரியாது.. ஆனா இருக்கிற ஏபிசிடி, உங்கப்பன் தாடின்னு எல்லா எழுத்துலயும் சட்டத்தை கொண்டு வருவான்.. என்சிஏ, என்ஆர்சி, என்ஆர்பி.. இவங்களை விட்டால், இன்னும் 4 வருஷத்துக்கு இதைத்தான் பண்ணிட்டு இருப்பாங்க.

நீட் தேர்வு
ஈவிஎம்-ல் மொள்ளமாரித்தனம் பண்ணித்தான் இவங்க ஆட்சிக்கு வந்திருக்காங்க. அதனால இவங்களை ஒட்டுமொத்தமா துடைச்செறியறதுதான் என்னுடைய வேண்டுகோள்.. பத்திரிகையாளர்களுக்கும் நான் வேண்டிக்கிறேன், இந்தியா முழுக்க எல்லாம் வெளிப்பட்டுடுச்சு.. கட்டுரைகளை ஏதாவது எழுதி இவங்க ஆட்சியை துடைத்தெறியணும்.. உதாரணத்துக்கு இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு, நீட் தேர்வு.. இது ரெண்டுத்துலயும் ஆள்மாறாட்டம் பண்ணி ஆளை புடிச்சாங்களே, கைது பண்ணாங்களே.. அப்பறம் நீ மட்டும் ஏன் ஆட்சியில உட்கார்ந்திருக்கே, கீழே இறங்கணுமா இல்லையா? கைதானவங்களுக்கு ஒரு சட்டம், உங்களுக்கு ஒரு சட்டமா?

அம்மாக்கள்
அந்த டெல்லியில ஷாகீன்பாக் போராட்டம் இருக்கே.. ப்பா.. புல்லரிக்குதுங்க.. அதை நான் பார்த்துட்டே இருக்கேன்... 90 வயசுங்க, அசால்ட்டா பதில் சொல்றாங்க... படிக்கிறாங்க.. கண்ணாடி போடாம படிக்கிறாங்க.. அந்த நாணிமாக்கள், அம்மாக்கள் இன்னைக்கும் போராடிட்டு இருக்காங்க... அவங்களால கைது மட்டும்தான் பண்ண முடியும்.. இஷ்டத்துக்கு சட்டம் போடறதா?

வாபஸ் வாங்கணும்
இவங்களை யாரும் மன்னிக்க மாட்டாங்க.. முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல.. அனைத்து தாழ்த்தப்பட்ட சமுதாயமும் இவங்களை மன்னிக்காது.. உபி.யில ஒருத்தர் இருக்காரு. அய்யோ, அய்யோ, அய்யோ அவர் பண்ற கூத்து.. எங்கிருந்து புடிச்சிட்டு வந்தாங்க? ஒரு படிப்பறிவு இல்லை.. ஒன்னுமே இல்லை, 25, 30 பேருக்கு மேல சுட்டுத்தள்ளியாச்சு.. சி.எம்-ன்ற பதவிக்கு ஒரு ஸ்டேட்டஸ் வேணாமா? இந்த பருப்பு வேகாது.. இந்த சட்டத்தை உடனே வாபஸ் வாங்கணும்!!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications