நீதி கேட்கும் பிரசாரத்திற்கு வாகனம் ரெடி...ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குஷி !
நீதி கேட்கும் பிரசாரப் பயணத்திற்காக தயாரகியுள்ள வாகனத்தை தனது ஆதரவாளர்களுடன் பார்வையிட்டார் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னை: அதிமுக தொண்டர்களை ஒன்று திரட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீதி கேட்கும் பிரசாரப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இவருடன் தீபாவும் பயணிக்க உள்ளார். இதற்காக பிரத்யேகமான வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து சசிகலா மீது அதிருப்தியில் இருந்த அ.தி.மு.க. எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்து அவரது கரத்தை பலப்படுத்தினர்.

ஓபிஎஸ் அணியில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மாபா பாண்டியராஜன், டாக்டர் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏக்கள் ஆறுகுட்டி, செம்மலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அணி சேர்ந்துள்ளனர்.

இந்தநிலையில் அதிமுக தொண்டர்களை ஒன்று திரட்ட ஓபிஎஸ் அணி புதிய வியூகம் வகுத்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் நீதி கேட்கும் பிரசார சுற்றுப்பயண திட்டமும் வகுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக ஜிப்சி டைப் ஜீப் ஒன்று தயாராகியுள்ளது. அதனை தனது ஆதரவாளர்களுடன் பார்வையிட்டார் ஓ.பி.எஸ். இதனால் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் குஷியில் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications