அண்ணாமலை வெளியிட போகும் ஊழல் பட்டியல்.. வந்து விழுந்த கேள்வி.. டக்கென்று இபிஎஸ் அளித்த பதில்
சென்னை: தமிழகத்தில் ஜனநாயகம் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தான் நிலவி வருகிறது என்று அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடபபடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை, ஊழல் பட்டியிலை வெளியிட்ட பிறகுதான் கருத்து கூற முடியும். சட்டமன்றத்தில் பேசுவது அனைத்தியும் நீக்கி விடுகிறார்கள்.

அரசுக்கு எதிராக நாங்கள் எது பேசினாலும் அதை நீக்கி விடுகிறார்கள். நாங்கள் மக்கள் குறைகளை எடுத்து கூறும்போது அதனை சட்டமன்றத்தில் குறிப்பில் இருந்து நீக்கி வெளியிடுகிறார்கள். நான் பேசும் கருத்துக்களை சட்ட மன்றத் தலைவர் அதற்கு அனுமதி கொடுப்பதில்லை தொடர்ந்து சட்டமன்றத்தில் இதற்கான குரலை சட்டமன்றத்தில் எழுப்பி வருகிறோம்.
தமிழத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என தொடர்ந்து நடைபெறுகிறது. விருதாச்சல சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த 13 மணி நேரத்திற்கு பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டமன்றத்தில் தகவல் கிடைத்த உடனே வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அந்த முதல் தகவல் அறிக்கை போலீசாரால் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சட்டமன்றத்தில் எனக்கு முன்னால் பேசியதும் எனக்கு பிறகு பேசியதும் உள்ளது. ஆனால் நான் பேசியதை எடிட் செய்து விட்டார்கள். பிரதான எதிர்க்கட்சி தலைவர் சட்டமன்றத்தில் பேசுவதை ஒளிபரப்பு செய்வது இல்லை. இவர்கள் ஜனநயாகத்தை மதித்தால்தேனே மற்றவர்கள் மதிப்பார்கள்.
கடந்த காலங்களில் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் அதிமுக அரசால் கொடுக்கப்பட்டு வந்தது. திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் ஏற்படுகிறது. இதற்கு திமுக அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம். விவசாயிகளுக்கு மும்முனை மின்சார இணைப்பு வழங்கினோம். ஆனால் அமைச்சர் கட்டமைப்பு சரியில்லை என்கிறார். எதாவது ஒரு சாக்கு போக்கு சொல்கிறார்கள். நிர்வாகத்திறமையின்மையால்தால் மின் வெட்டு வந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பேசாமல் பழைய செய்திகளை குறித்து திமுக அரசு பேசியிருக்கிறது. தற்போது உள்ள பிரச்சினையை பேச வேண்டும். அதற்கு எப்படி தீர்வு காண வேண்டும் என்பது குறித்து பேச வேண்டும். ஆனால் அது குறித்த தகவலை தி.மு.க. அரசு தெரிவிப்பதில்லை. அரசு செயல்படவில்லை என்றால் அதை நீக்கி விடுவார்கள்.












Click it and Unblock the Notifications