ஸ்டாலின் சிறந்த நிர்வாகி, சீமான் சிறந்த போராளி... ரஜினியின் உள்நோக்கம் புரியவில்லையே... பொன்.ராதா
மு.க.ஸ்டாலின் சிறந்த நிர்வாகி, சீமான் சிறந்த போராளி என்று நடிகர் ரஜினி காந்த் தெரிவித்ததன் உள் நோக்கம் புரியவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகர்கோவில்: மு.க.ஸ்டாலின், சீமான் ஆகியோரை நடிகர் ரஜினி காந்த் பாராட்டியிருப்பதற்கான உள்நோக்கம் புரியவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த 5 நாள்களாக ரசிகர்கள் ரஜினிகாந்த் சந்தித்து வந்தார். கடைசி நாளான வெள்ளிக்கிழமை அவர் ரசிகர்கள் முன்னிலையில் உரையாற்றினர்.
அப்போது அவர் பேசுகையில் , மு.க.ஸ்டாலின் சிறந்த நிர்வாகி, சீமான் சிறந்த போராளி, அவரது பேச்சுகளை கேட்டு நானே பிரமித்திருக்கிறேன். தொல் திருமாவளவன் திறமைசாலி, அன்புமணி ராமதாஸ் புதுமையை புகுத்துபவர் என்று தெரிவித்தார்.

நாகர்கோவிலில் பேட்டி
இதுகுறித்து நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. அவர் பாஜகவில் இணைந்தால் மகிழ்ச்சி அடைவோம்.

போருக்கு தயார் என்றால்...
அரசியலுக்கு வர வேண்டுமா அல்லது பாஜகவில் இணைய வேண்டுமா என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாகும். ஆனால் போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்கிறாரே அதுதான் என்னவென்று புரியவில்லை.

உள்நோக்கம் புரியல
ஸ்டாலின் சிறந்த நிர்வாகி, சீமான் சிறந்த போராளி என்று ரஜினி கூறியிருக்கிறார். அதன் உள்நோக்கம் எனக்கு புரியவில்லை.தமிழகம் கடந்த பல ஆண்டுகளாக நடிப்புத் துறையின் பிடியில்தான் இருக்கிறது என்பது தவறு. யார் எந்த துறையில் இருக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. எப்படிப்பட்ட ஆட்சி என்பதுதான் முக்கியம். என்னை பொறுத்தவரையில் தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் வரவேண்டும்.

கால்கள் இல்லை
தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையை சொல்ல போனால், தமிழகத்தில் எந்த கட்சிகளுக்கும் கால்கள் இல்லை. ஊன்றிய காலையும் அதிமுகவும், திமுகவும் எப்போதோ இழந்துவிட்டன. தமிழர்களின் பிரச்சினைகளை யார் சொல்லியும் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இல்லை என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications