மறைந்த கர்தினல் சைமன் லூர்துசாமியின் உடல் புதுச்சேரியில் அடக்கம்
புதுச்சேரி: புதுச்சேரியில் காலமான கர்தினல் சைமன் லூர்துசாமியின் இறுதிச்சடங்கு மற்றும் அடக்கம் இன்று நடைபெற்றது.
ரோம் நகரில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் கர்தினலாக இருந்த சைமன் லூர்துசாமி கடந்த 2 ஆம் தேதி மரணம் அடைந்தார். மறைந்த கர்தினல் சைமன் லூர்துசாமியின் உடல் நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதுவை வந்தது.
புதுவை காந்தி வீதியில் உள்ள பெத்திசெமினார் பள்ளி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு கவர்னர் வீரேந்திர கட்டாரியா, முதல்வர் ரங்கசாமி, எதிர்கட்சி தலைவர் வைத்திலிங்கம், கண்ணன் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தமிழகம் மற்றும் புதுவை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து இன்று காலை 10 மணி வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து கர்தினல் சைமன் லூர்துசாமியின் உடல் அங்கிருந்து ஊர்வலமாக மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு போப் ஆண்டவரின் தூதர் சால்வோ தோரே பொன்னாக்கியோ தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து போப் ஆண்டவரின் இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது.
பின்னர், ஆலயத்தின் சூசையப்பர் கெபி அடியில் கர்தினல் லூர்துசாமியின் உடல் புதைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள கர்தினல்கள், பேராயர்கள், ஆயர்கள், குருமார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் கர்தினல் லூர்துசாமியின் சொந்த ஊரான கல்லேரி பகுதியை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.
கர்தினல் லூர்துசாமியின் உடல் அடக்கத்தை முன்னிட்டு இன்று புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications