அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலுக்கு ஆபரணப் பெட்டி புறப்பட்டது: பக்தர்கள் வரவேற்பு
புனலூர்: அச்சன்கோவில் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக திரு ஆபரண பெட்டி புனலூரில் இருந்து இன்று கொண்டு செல்லப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
தமிழகம் மட்டுமல்லாது தென் மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மாலை அணிந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசியில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ள இந்த அச்சன்கோவில் ஐயப்பனை சபரிமலை செல்லும் பக்தர்கள் தவறாமல் வழிபடுவார்கள்.

ஐயப்பனின் படை வீடுகளில் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்று அச்சன்கோவில், ஆரியன்காவு இந்த இரு ஆலயத்திலும் ஆண்டுத்தோறும் மார்கழி மாதம் மண்டல மகோற்சவ விழா துவங்குவது வழக்கம். இந்த திருவிழா மொத்தம் 10 நாட்கள் நடைபெறும். விழா தொடங்குவதை முன்னிட்டு இன்று கேரளா மாநிலம் புனலூரில் உள்ள அரசு கருவூலத்தில் இருந்து சுவாமி ஐயப்பன் பயன்படுத்திய தங்கவாள்,வைரம்,வைடூரியங்கள், கீரிடம் உள்ளிட்ட முக்கிய தங்க பொருட்கள் இன்று காலை 9.மணிக்கு புறப்பட்டது.
பின்னர் சம்பிரதாய நிகழ்வுகள் முடிந்து 9.30 மணியளவில் புனலூர் பார்த்த சாரதி ஆலயத்திற்கு பலத்த பாதுகாப்போடு கொண்டு செல்லப்பட்டன. இன்று காலை 10.30 மணியளவில் அங்கிருந்து தங்க ஆபரணப் பெட்டி பலத்த போலீஸ் பாதுக்காப்போடு அச்சன் கோவிலுக்கு புறப்பட்டது.
அச்சன் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் தங்க ஆபரப் பெட்டிக்கு தமிழக கேரளா எல்லை பகுதியான புளியரை, செங்கோட்டை, காலங்கரை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்காசியில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ள அச்சன்கோவில் ஐயப்பனை சபரிமலை செல்லும் பக்தர்கள் தவறாமல் வழிபடுவார்கள். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மகோற்சவ விழா நாளை கொடி ஏற்றத்தோடு தொடங்குகிறது. ஐயப்பன் ஆபரணப் பெட்டியை வரவேற்க அச்சன்கோவிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications