ஜெ.வை விமர்சித்த திண்டுக்கல் சீனிவாசன்.. வழக்கு தொடுத்தார் அதிமுக நிர்வாகி!
ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் பயன்படுத்துகிறார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

மதுரை: ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் பயன்படுத்துகிறார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவரை பதவி நீக்கம் செய்ய கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவ்வப்போது ஏதாவது ஒன்றை பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் திண்டுக்கல்லில் அவர் பேசியது பெரிய பிரச்சனை ஆனது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவர் பேசியது பெரிய பிரச்சனைக்கு உள்ளானது.

அதில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பணத்தை கொள்ளையடித்தனர். ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் திருடிவிட்டார் என பேசினார். சீனிவாசன் இப்படி பேசியிருப்பது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திண்டுக்கல் சீனிவாசனை பதவி நீக்கம் செய்ய கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மதுரை ஐகோர்ட் கிளையில் அதிமுக நிர்வாகி சீனிவாசன் வழக்கு தொடுத்துள்ளார்.
வேடசந்தூர் கூட்டத்தில் ஜெ. கொள்ளையடித்ததாக பேசியது தவறு. முன்னாள் முதல்வரை அவதூறாக பேசியதால் சீனிவாசனை நீக்க வேண்டும் என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.தாம் பேசியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டதாக திண்டுக்கல் சீனிவாசன் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications