பல மடங்கு விலை அதிகமாக ‘பிளாக்’கில் பறக்கும் ஐபிஎல் டிக்கெட்.. விவரங்களை தாக்கல் செய்யக்கோரி வழக்கு!
சென்னை : ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் பல மடங்கு அதிக விலையில் விற்கப்படுவதாக கூறப்படும் நிலையில், சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்த விவரங்களை தாக்கல் செய்யக் கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விரைவில் ஓய்வு பெற இருப்பதால் அதற்குள் அவர் மைதானத்தில் விளையாடுவதை பார்க்க வேண்டும் என்பதற்காக ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.

இதனால் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கு மிகப்பெரிய டிமாண்ட் மார்க்கெட்டில் உள்ளது. கள்ளச்சந்தையிலாவது டிக்கெட்டை வாங்குவதற்கு ரசிகர்கள் முட்டி மோதுகின்றனர். இதனால், வழக்கமான டிக்கெட் விலையை விட இரு மடங்கு, மும்மடங்கு விலை அதிகம் கொடுத்து பலரும் மேட்ச் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில், சென்னை மதுரவாயலைச் சேர்ந்த அசோக் சக்கரவர்த்தி என்ற கிரிக்கெட் ரசிகர், : சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்த விவரங்களை தாக்கல் செய்யக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அசோக் சக்கரவர்த்தி தாக்கல் செய்த மனுவில், "கடந்த மார்ச் மாதம் முதல் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டின் ஏழு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளுக்கான ஆன்லைன் மற்றும் நேரடி டிக்கெட்டுகள் விற்பனை செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன.

மே 23, 24ஆம் தேதிகளில் தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ஆன்லைன் மூலம் நடந்த டிக்கெட் விற்பனையில் முறைகேடுகள் நடந்துள்ளது. இப்போட்டிகளுக்கான பெரும்பாலான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது.
எனவே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஏழு போட்டிகளின்போது ஆன்லைன் மூலம் விற்கப்பட்ட டிக்கெட்டுகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க பிசிசிஐ, சென்னை சூப்பர் கிங்ஸ், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications