பஸ்சுக்குள் தூங்கிய கண்டெக்டர்... பையிலிருந்த ரூ 30,000 பணம் அபேஸ்!
சேலம்: சேலத்தில் பேருந்துக்குள் தூங்கிய கண்டெக்டரிடமிருந்து ரூ 30 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
அந்தியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான அரசு பஸ் ஓன்று நேற்று இரவு 10.30 மணியளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு பழனியில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 3.15 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
பயணிகள் அனைவரும் இறங்கியதும், பஸ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள கோவை செல்லும் வழித் தடத்தில் நிறுத்திய அப்பேருந்தின் கண்டெக்டர் குமரேசன் (30) மற்றும் டிரைவர் ராஜா செரிப்(26) ஆகிய இருவரும் பயணக் களைப்பில் பேருந்திலேயே சிறிது நேரம் தூங்கியுள்ளனர். இதில், கண்டெக்டரிடம் முதல்நாள் பயணிகளிடம் வசூல் செய்த டிக்கெட் பணம் ரூ 30 ஆயிரம் இருந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை சுமார் 6 மணியளவில் எழுந்து பார்த்த குமரேசன், தனது பையில் வைத்திருந்த பணம் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பேருந்தை நோட்டமிட்ட மர்ம ஆசாமி, பஸ்சுக்குள் ஏறிச் சென்று பணத்தை திருடிச் சென்றிருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கப் படுகிறது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் குமரேசன் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications