முதல் காவிரி ஆணைய கூட்டம்.. அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
ஜூலை 2-ல் முதல் காவிரி ஆணைய கூட்டம் நடக்க உள்ள நிலையில் காவிரி ஆணையம் தொடர்பாக விவாதிக்க அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சென்னை: ஜூலை 2-ல் முதல் காவிரி ஆணைய கூட்டம் நடக்க உள்ள நிலையில் காவிரி ஆணையம் தொடர்பாக விவாதிக்க அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
நீதிமன்ற உத்தரவை பின்பற்றி காவிரி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவுக்கு 2 கர்நாடகா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அனைத்து 4 மாநிலத்திற்கும் காவிரி ஆணைய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஜூலை 2-ல் முதல் காவிரி ஆணைய கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது. ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் 4 மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் எவ்வளவு தண்ணீர் எந்த தேதியில் திறக்கப்பட வேண்டும் என்று முடிவு வெளியாகும். இந்த நிலையில் காவிரி ஆணையம் தொடர்பாக விவாதிக்க அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
காவிரி ஆணையத்தின் தமிழக உறுப்பினர் பிரபாகரும் கூட்டத்தில் பங்கேற்றார். காவிரி கூட்டத்தில் என்ன பேசலாம் என்பது குறித்து இதில் பேசப்பட்டது. இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications