ரயில் கொள்ளைச் சம்பவம்... பணத்திற்கு பாதுகாப்பாக ரயிலில் சென்ற 9 போலீஸாரிடம் விசாரணை
சென்னை: சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் சுமார் ரூ.6 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதுகாப்புக்கு சென்ற போலீசாரிடம் தனித்தனியே விசாரணை நடைபெற்றது.
கடந்த சில நாட்கக்கு முன்பு சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு சுமார் ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக எந்தவித துப்பும் துலங்காததையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலைய ஊழியர்களிடமும், சேத்துப்பட்டு பணிமனையிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சேலம்-சென்னை இடையே உள்ள ரயில் நிலையங்களுக்கு தனிப்படை அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்னலில் ரயில் நின்ற இடங்கள் மற்றும் ரயில் மெதுவாக இயக்கப்படும் பகுதிகள் ஆகியவை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில் பணத்திற்கு பாதுகாப்பாக ரயிலில் சென்ற சேலம் மாநகர ஆயுதப்படை டிஎஸ்பி உள்ளிட்ட 9 போலீசாரிடம் நேற்று முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் செல்வராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
சிறப்பு விசாரணை அதிகாரியான நெல்லை மாநகர துணை ஆணையர் அமித்குமார் சிங், பணத்திற்கு பாதுகாப்பாக சென்ற 9 போலீசாரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். இதேபோல சிபிசிஐடி எஸ்.பி. நாகஜோதியும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications