ஊழல் வழக்கு: அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது டிச.10-க்கு ஒத்திவைப்பு
டெல்லி: மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது டிசம்பர் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் பதவி வகித்த போது இந்தூர், லக்னோவில் மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி அன்புமணி ராமதாஸ் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் அன்புமணி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் எனவும் சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அன்புமணி உள்ளிட்ட 10 பேர் மீதும் இன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதாக இருந்தது. ஆனால் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அன்புமணி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இம்மனு மீது வரும் 6-ந்தேதி விசாரணை நடைபெற உள்ளது. இதை இன்றைய விசாரணையின் போது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அன்புமணி வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனைத் தொடர்ந்து அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது வரும் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications