ராம்குமாரும், விடாமல் துரத்திய "சிசிடிவி"யும்... !
சென்னை: சுவாதி கொலை வழக்கில் ஆரம்பம் முதலே சிசிடிவி கேமரா என்ற வார்த்தை தவறாமல் இடம் பெற்று வருகிறது. இந்த வழக்கி்ல் சுவாதி, ராம்குமாரை விட சிசிடிவி கேமராதான் முக்கியமான அம்சமாக மாறியுள்ளது.
சுவாதியின் கொடூர கொலை குறித்து துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறிய போது, நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களின் மூலமே கொலையாளியின் உருவத்தை போலீசார் யூகித்தனர். அதன் மூலமே, ராம்குமாரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், புழல் சிறையில் மின்கம்பியைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் சிசிடிவி கேமரா பழுதாக இருந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்ட காட்சிகள் அதில் பதிவாகவில்லை.
இப்படியாக கடந்த ஜூன் மாதம் முதல் ராம்குமாரோடும், சுவாதி கொலை வழக்கிலும் சிசிடிவி கேமரா முக்கியமான ஒரு பொருளாக கருதப்பட்டு வருகிறது.
இதோ அதைப் பற்றிய ஒரு தொகுப்பு...

சிசிடிவி இல்லை...
ஜூன் மாதம் 24ம் தேதி காலையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார் சுவாதி. அந்த ரயில் நிலைய வளாகத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால், ஆரம்பத்தில் துப்பு கிடைக்காமல் திணறியது போலீஸ்.

மலை போல் நம்பினர்...
பின்னர் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்கள் ஆராயப்பட்டன. வேறு எந்த துப்புமே கிடைக்காத நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளை மட்டுமே போலீசார் மலை போல் நம்பினர்.

சந்தேகம்...
அதன் தொடர்ச்சியாக ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் சந்தேகப்படும் வகையில் நடந்து வரும் ஒருவரின் உருவத்தை சிசிடிவி காட்சிகளாக போலீசார் வெளியிட்டனர். அவர் தான் சுவாதி கொலையாளி என போலீசார் சந்தேகித்தனர்.

முடிவு...
பின் வேறொரு சிசிடிவியிலும் அதே நபர் வேகவேகமாக நடந்து செல்லும் காட்சிகள் இருந்தது. இதனால், பல்வேறு விசாரணைகளுக்குப் பின் அந்நபரே சுவாதி கொலையாளி என முடிவு செய்யப்பட்டது.

தப்பி ஓடும் காட்சிகள்...
போலீசாரின் தொடர் விசாரணையில் மற்றொரு சிசிடிவியில் கொலையாளி ரயில் நிலையத்தில் இருந்து தப்பி ஓடும் காட்சிகள் கிடைத்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கினர்.

சிக்கிய ராம்குமார்...
சிசிடிவி காட்சிகளில் தெளிவில்லாமல் இருந்த கொலையாளியின் உருவத்தை தொழில்நுட்ப உதவியுடன் மெருகேற்றினர். அந்த புகைப்படத்தைக் கொண்டு நுங்கம்பாக்கம், சூளைமேடு பகுதிகளில் போலீசார் நடத்திய விசாரணையில், அங்கிருந்த மேன்சன் ஒன்றில் ராம்குமார் தங்கி இருந்தது தெரியவந்தது.

கைது...
அங்கு நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் நெல்லையில் ராம்குமார் கைது செய்யப்பட்டார். ஆனால், ராம்குமார் தங்கியிருந்த மேன்சனில் சிசிடிவி கேமரா சிறிது நேரம் மட்டுமே காட்சிகளை சேமித்து வைக்கும் தன்மை கொண்டது. இதனால், ரத்தக்கறை படிந்த சட்டையுடன் ராம்குமார் மேன்சனில் நுழைந்ததற்கான ஆதாரம் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

ஒப்பீடு...
கைது செய்யப்பட்ட ராம்குமாரின் உருவத்தை சிசிடிவி காட்சிகளோடு ஒப்பிட்டு பார்க்க வசதியாக, அவரை சம்பந்தப்பட்ட இடத்தில் நடக்க வைத்து படம் பிடிப்பது என முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த முயற்சி கைவிடப்பட்டது. சிறை வளாகத்திலேயே ராம்குமார் படம் பிடிக்கப்பட்டார்.

ராம்குமார் தற்கொலை...
இந்நிலையில் புழல் சிறை வளாகத்திலேயே மின்கம்பியைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், இப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை என்பது பலரது கருத்து. புழல் சிறையில் கைதிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அப்படியெனில் அதில் ராம்குமார் தற்கொலை செய்த காட்சிகள் பதிவாகி இருக்க வேண்டுமே என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

சிசிடிவி பழுது...
ஆனால், இதற்கு பதிலளித்துள்ள சிறை வட்டாரம், ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பந்தப்பட்ட பகுதியில் மட்டும் சிசிடிவி கேமரா பழுது எனத் தெரிவித்துள்ளது. இது ராம்குமார் மரணத்தில் மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications