மறைந்த பஞ்சு அருணாசலம் உடலுக்கு இளையராஜா, பாரதிராஜா நேரில் அஞ்சலி !
சென்னை: மறைந்த பஞ்சு அருணாசலம் உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட திரைத்துறையினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பிரபல வசனகர்த்தாவும், இயக்குனரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலம் இன்று சென்னையில் காலமானார். இசையமைப்பாளர் இளையராஜாவை அன்னக்கிளி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது இவர்தான். மேலும், ரஜினி, கமல் ஆகியோரை வைத்து அதிக படங்களைத் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், மறைந்த பஞ்சு அருணாச்சலத்தின் உடலுக்கு திரையுலகக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் நாசர், சிவக்குமார் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், திரையுலகைச் சேர்ந்த கவுண்டமணி, பாக்யராஜ், சுந்தர் சி, ஜெயம் ரவி, சூர்யா, கார்த்திக், சத்தியராஜ், சிபிராஜ், சாந்தனு, வெங்கட் பிரபு, கார்த்திக் ராஜா, ஜித்தன் ரமேஷ், கோவை சரளா, குஷ்பூ, சுந்தர் சி, சித்ரா லஷ்மணன், கம், ஏ.எல். அழகப்பன், எஸ்.வி. சேகர், யுவன் சங்கர் ராஜா, சந்தான பாரதி, மனோ பாலா உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

பஞ்சு அருணாசலத்தின் மகன், மகள் வெளிநாட்டிலிருந்து வரவேண்டியுள்ளது. எனவே தற்போதைக்கு மருத்துவமனைக்கு உடல் கொண்டுசெல்லப்படும். 2 நாள்கள் கழித்து இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications