மீண்டும் வருகிறது ஜல்லிக்கட்டு! தடை விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவு!!
கும்பகோணம் : தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வின் மாநில செயற்குழு கூட்டம் 2 வது நாளாக கும்பகோணம்-தஞ்சை சாலையில் உள்ள ரிசார்ட்ஸில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், முன்னாள் மாநில தலைவர்கள் லட்சுமணன், மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதாகவும், அதில் சட்டரீதியிலான பிரச்சனை உள்ளதால் சில மறு சீரமைப்புகள் செய்ய வேண்டி வரும் என்றும் குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த புதிய விதிமுறைகளை வகுத்துள்ளதாகவும், அதன்படி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் பிரகாஷ் ஜவ்டேகர் குறப்பிட்டார்.
தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார் .
இதன் மூலம் தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வாய்ப்பு எழுந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications