மழை சேத நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசுக்கு உதவ மத்திய அரசு தயார்- பொன்.ராதாகிருஷ்ணன்
மதுரை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை சேத நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசுடன் இணைந்து, மத்திய அரசும் உதவ தயாராக இருக்கின்றது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்மதுரை வந்தார். வ.உ.சி நினைவு தினத்தையொட்டி சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேசிய அவர், "வ.உ.சி. கண்ட கனவுகளை மோடி அரசு நிறைவேற்றி வருகிறது. உலகத்தில் இந்தியாவை முதன்மையான நாடாக்க உறுதி எடுத்துள்ளோம். பீகார் மாநில அரசியலை தமிழக அரசியலுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. அந்த மாநிலத்தில் 1.5 கோடி வாக்குகளை பாஜக பெற்றுள்ளது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு அரசியல் கட்சிகள் இணைய உள்ளன. எந்தெந்த கட்சிகள் என்று இப்போது கூற முடியாது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பை குறித்து தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டு வருகிறேன். பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications