For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வியூகம் அமைத்து மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண போகிறதாம் மத்திய அரசு: வாசன் பேச்சு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Centre tries to sort out the fishermen issue, says G K Vasan
சென்னை: தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண மத்திய அரசு வியூகம் வகுத்துள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

சென்னை துறைமுகத்தில் ஆண்களுக்கான நவீன படுத்தப்பட்ட மருத்துவமனையை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சென்னை கலங்கரை விளக்கத்தை பார்வையிட பொது மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதால் தினமும் ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.

கலங்கரை விளக்கத்தை பார்வையிடும் நேரத்தை நீடிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுக்கின்றனர். கிறிஸ்துமஸ் தினத்தில் இருந்து பார்வை நேரத்தை நீடிக்க ஏற்பாடு செய்யப்படும்.

இதே போல் பொது மக்களும் மாணவர்களும் துறைமுகங்களை பார்வையிடும் நிகழ்ச்சியை மும்பையில் தொடங்கி வைத்தேன். தமிழ் நாட்டில் உள்ள துறைமுகங்களை தை மாதம் முதல் அனைவரும் பார்க்க ஏற்பாடு செய்வேன்.

மீனவர் பிரச்சினை

தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண மத்திய அரசு வியூகம் அமைத்துள்ளது. மேலும், தமிழகத்திற்கு மின்சாரம் வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை என்றும் ஜி.கே.வாசன் கூறினார்.

English summary
Union shipping minister G K Vasan said that the central govt has some plans to sort out the TN fishermen issue soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X