ஜெ., வுக்காக திருப்பதியில் பூஜை- ஏழுமலையானின் அருளால் மீண்டு வந்து ஆட்சி புரிவார்: சந்திரபாபு நாயுடு
சென்னை: ஏழுமலையானின் அருளால் அவர் மீண்டு வந்து ஆட்சி புரிவார் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி திருப்பதியில் சிறப்புப் பிரார்த்தனை நடத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டதை அடுத்து திருப்பதி ஜீயர்கள் சென்னை வந்து திருப்பதி ஏழுமலையன் பிராத்தனை தொடர்பான பிரசாதத்தையும் , லட்டையும் அப்பல்லோ மருத்துவமனையில் வழங்கி சென்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 22ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று அவரது தொணடர்கள் மற்றும் பொது மக்கள் ஆங்காங்கே சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும். மீண்டும் அவர் தமிழ் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்று வாழ்த்து கூறியிருக்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

ஜெயலலிதா சிகிச்சை
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 22 நாட்கள் ஆகும் நிலையில் அவரது உடல் நலம் குறித்து நாடெங்கும் உள்ள தலைவர்கள், ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் நேரில் வந்து விசாரித்துச் செல்கின்றனர். நேரில் வர இயலாதவர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் பிரபலங்கள் முதல்வரைக் காண வந்து செல்கின்றனர்.

சந்திரபாபு நாயுடு வாழ்த்து
இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பினார். ஆந்திர அரசின் சார்பாகவும் தனது சார்பாகவும் திருப்பதி கோவிலில் விசேஷ பூஜை செய்து பிரசாதத்தை அனுப்பிவைக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

ஜெ., குணமடைவார்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, 'உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் தொடந்து சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, விரைவில் குணமடைந்து மீண்டும் மக்களுக்கு தொண்டு செய்வார். இதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்றார்.

ஏழுமலையான் அருள்
ஏழுமலையானின் அருளால் அவர் மீண்டு வந்து ஆட்சி புரிவார். அவர் குணமடைய வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு பிராத்தனை நடத்தி அவருக்கு லட்டு, தீர்த்த பிரசாதம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.
|
லட்டு பிரசாதம்
இதனையடுத்து அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த திருப்பதி ஜீயர்கள் முதல்வர் நலம் பெற வேண்டி நடத்திய சிறப்பு பிராத்தனை தொடர்பான பிரசாதம், லட்டு, அங்க வஸ்திரத்தையும் அப்பல்லோ மருத்துவமனையில் வழங்கி சென்றனர். இந்த தகவல் அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா இன்றும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications