‛‛அநியாயம் பண்ணாதீங்க’’.. இரவில் பேச்சுலர்ஸ்க்காக வீதியில் இறங்கி போராடிய நடிகை ஷகிலா.. பரபர சென்னை
சென்னை: சென்னை சூளைமேடு பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பேச்சுலர்களுக்காக நடிகை ஷகிலா வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியான நிலையில் நடிகை ஷகிலாவை பலரும் பாராட்டி வருகின்றனர். ஷகிலா எதற்காக போராடினார்? என்பது தொடர்பான முழுதகவல் வருமாறு:
தமிழ், மலையாளம் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஷகிலா. இவர் தற்போது தொலைக்காட்சிகளில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். மேலும் அவர் சென்னையில் குடியேறி வசித்து வருகிறார்.
இந்நிலையில் தான் இரவு நேரத்தில் சென்னையில் பேச்சுலர்ஸ்களுக்காக நடிகை ஷகிலா வீதியில் இறங்கி திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு
அதாவது சென்னை சூளைமேடு பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதேபோல் பேச்சுலர்ஸ்கள் ஒன்றாக இணைந்து குடியிருப்பை வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் மாதந்தோறும் பராமரிப்பு தொகை செலுத்தி வருகின்றனர்.

குடியிருப்பில் ஏற்பட்ட பிரச்சனை
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக பராமரிப்பு தொகை கட்டவில்லை எனக்கூறி சுமார் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் கிடைக்காமல் அவர்கள் சிரமத்தை சந்தித்தனர். இதுபற்றி அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்திடம் அவர்கள் கேட்டபோதும் உரிய முறையில் அவர்கள் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.

பேச்சுலர்கள் போராட்டம்
இந்நிலையில் தான் நேற்று இரவு 20க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் இரவில் தரையில் அமர்ந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் பேச்சுலர்களாக இருந்தனர். தண்ணீர் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் பராமரிப்புத் தொகையாக குடும்பமாக இருப்பவர்களிடம் 2,500 வசூலிக்கப்படும் நிலையில் பேச்சுலர்களிடம் மட்டும் ரூ.9 ஆயிரம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.

நடிகை ஷகிலா ஆதரவு
இதுபற்றி அறிந்த நடிகை ஷகிலா இரவில் அங்கு சென்றார். அவர்கள் போராட்டம் நடத்திய பெண்கள், இளைஞர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அப்போது அநியாயம் செய்யாமல் முறையாக தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். பராமரிப்பு தொகையை உயர்த்தி வாங்குவதை நிறுத்த வேண்டும் என ஷகிலா குரல் கொடுத்தார்.

பாராட்டு
நடிகை ஷகிலாவுக்கும், அந்த அபார்ட்மென்ட்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றாலும் கூட நியாயத்துக்காக போராடுபவர்களுக்கு அவர் குரல் கொடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியான நிலையில் பலரும் ஷகிலாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications