எல்லோரிடமும் வெகுளியாக பழகுவார்.. அயனாவரம் சிறுமியின் பரிதாபம்!
Recommended Video

சென்னை: சென்னை அயனாவரத்தில் 17 மிருகங்களால் சீரழிக்கப்பட்ட சிறுமி குறித்த தகவல்கள் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளன.
எந்த அளவுக்கு மோசமான முறையில் இந்த மனித மிருகங்கள் அந்த சிறுமியை சீரழித்திருப்பார்கள் என்பதை நினைக்கும்போது நெஞ்சே வெடிப்பது போல உள்ளது.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் பலருக்கும் செல்லப் பிள்ளையாக இருந்துள்ளார் இந்த சிறுமி. ஆனால் அந்த சிறுமியின் வெகுளித்தனத்தை இந்த கயவர்கள் பயன்படுத்திக் கொண்டு மிருகங்களாக மாறியுள்ளனர்.

கோபம் வருகிறது
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தொழிலதிபர். அவரது இரு மகள்களில் இளையவர்தான் இந்த சிறுமி. எல்லோரிடமும் வெகுளித்தனமாக பழகி வந்துள்ளார் இச்சிறுமி. தொடர்ந்து யாருடையாவது கண்காணிப்பு இவருக்கு அவசியமாக இருந்துள்ளது. இந்த இடத்தில்தான் சிறுமியின் தாயார் மீது கோபம் வருகிறது.

நல்ல மாற்றம்
முதல் முறையாக சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட போதே அந்த சிறுமியின் நடவடிக்கையில் நல்ல மாற்றம் தெரிந்திருக்கும். அதை வைத்தாவது சிறுமியிடம் விசாரணை செய்து அந்த சம்பவம் மேலும் நடைபெறாத வண்ணம் தடுத்திருக்கலாம்.

வாசல் வரை சென்றிருக்கலாம்
பெண் குழந்தைகள் என்றாலே பிஞ்சு குழந்தை முதல் 90 வயது பாட்டி வரை ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலத்தில் காது கேட்காத குழந்தையை அவரது தாய் இன்னும் கூடுதலாக கவனித்திருக்கலாம். சிறுமி பள்ளிக்கு சென்று வரும் போதும் வீடு திரும்பும் போது தாயோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ குழந்தையுடன் வாசல் வரையாவது வந்து சென்றிருக்க வேண்டும்.

66 வயது கிழவன்
இதை செய்யாமல் விட்டதால் இந்த கேடு கெட்ட 17 மிருகங்களும் சிறுமியை நாசம் செய்துள்ளனர். இதில் முதலில் பலாத்காரம் செய்த 66 வயது கிழவன்தான் மிகவும் கொடூரமானவன். தன் பேத்தி வயதில் இருக்கும் குழந்தையை இதுபோல் செய்திருக்கலாமா. சிறுமியின் தாயும் இவனுடன் பேசும் போது குழந்தைக்கு தாத்தா என்று தானே சொல்லிக் கொடுத்திருப்பார். அப்படி இருந்தும் இதுபோல் வெறிச்செயல் செய்த இவனைதான் முதலில் தூக்கிலிட வேண்டும். இவன் மட்டுமல்லாது மேலும் 16 அயோக்கியன்களையும் தூக்கிலிட வேண்டும். இல்லாவிட்டால் மேலும் கொடூரமான தண்டனை கொடுத்து கொல்ல வேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கம்.

ஊட்ட வேண்டும்
இவனது வீட்டை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்ட குழந்தையை தன் குழந்தையாக கருதி இவனுகளுக்கு ஜாமீன் மனுவை தாக்கல் செய்யாமல் இருக்க வேண்டும். அப்படி செய்தால் இந்த 17 பேரை போன்றே இவர்களும் மிருகங்கள் என சித்தரிக்கப்படுவர். தாய்மார்களும் தங்கள் குழந்தைகளின் மீது பெரும் அக்கறை செலுத்தி குழந்தைகளுக்கு நன்மை தீமைகளை கற்றுத் தர வேண்டும். யார் மிரட்டினாலும் பரவாயில்லை. என்ன நடந்தாலும் அம்மாவிடம் சொல்ல வேண்டும், நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற தைரியத்தை குழந்தைக்கு ஊட்ட வேண்டும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications