Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை புறநகர் பயணிகளுக்கு மேஜர் அறிவிப்பு கொடுத்த ரயில்வே..இந்த ரூட்டில் 7 மாதங்களுக்கு சேவை ரத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினமும் நுற்றுக்கணக்கான பயணிகள் பயணித்து வரும் நிலையில், பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் அன்றாட வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரி செல்பவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பெரும் வரப்பிரசாதமாக இருப்பது புறநகர் ரயில்கள் தான். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் சாலைகளில் பயணித்தால் சரியான நேரத்திற்கு அலுவலகம், பள்ளி, கல்லுரி செல்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.

 Chennai: Beach - Velachery MRTS Train services to be partially suspended for 7 Months

எனவே, பயணிகள் பலரும் புறநகர் ரயில் பயணத்தையே விரும்புவதுண்டு. செங்கல்பட்டில் இருந்து சென்னை நகருக்குள் பல்வேறு காரணங்களுக்காக தினமும் வந்து விட்டு செல்லும் பயணிகள் கூட இருக்கிறார்கள். காலை மற்றும் மாலை வேளைகளில் பரபரப்பான நேரங்களில் கிட்டத்தட்ட 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

ஏன் இந்த நடவடிக்கை?: சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடங்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலை மோதிக்கொண்டு இருக்கும். சென்ன கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையிலும் பறக்கும் ரயிலும் இயக்கப்படுகிறது. கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் இந்த பகுதிகளில் பயணிகளுக்கு பறக்கும் ரயில் சேவை பெரும் பயனளிப்பதாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து சேப்பாக்கம் வரையிலான பறக்கும் ரயில் சேவை 7 மாதங்களுக்கு நிறுத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே தற்போது 3 ரயில் வழித்தடங்கள் உள்ளன. இதில் இரண்டு பாதைகளில் மின்சார ரயில்களும் ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை எழும்பூரில் இருந்து பல ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுபோக தாம்பரத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் வழியாக வட மாநிலங்களுக்கு ரயில்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே உள்ள 4.3 கி.மீ தொலைவுக்கு நான்காவது புதிய ரயில்பாதை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே, சென்னை - கடற்கரை எழும்பூர் இடையே நான்காவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

 Chennai: Beach - Velachery MRTS Train services to be partially suspended for 7 Months

7 மாதங்கள் இயங்காது: இந்த நிலையில், நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகளுக்காக சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது, வரும் ஜூலை 1-ந்தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்து இருக்கிறது.

இதனால் பயணிகள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் தற்போது சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி பறக்கும் ரயிலில் ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், சேப்பாக்கம் வரை ரயில்கள் 7 மாதங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் கடும் சிரமங்கள் இருக்கும் எனவும் பயணிகள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+