ரூ75 கோடி மோசடி: பச்சமுத்துவுக்கு ஜாமீன் கொடுக்க கடும் எதிர்ப்பு- விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
சென்னை : மருத்துவ கல்லூரியில் சீட் தருவதாக கூறி ரூ75 கோடி மோசடி செய்த எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சமுத்துவுக்கு ஜாமீன் கொடுக்க மாயமான மதனின் தாயார், பணத்தை பறிகொடுத்த மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக 112 பேரிடம் ரூ.75 கோடி வரை மோசடி செய்ததாக மத்தியக் குற்றப்பிரிவில் வேந்தர் மூவிஸ் உரிமையாளர் மதன், கல்லூரி வேந்தர் பச்சமுத்து ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பல்கலைக்கழக வேந்தரான பச்சமுத்து கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அப்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பச்சமுத்து ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரது உடல்நிலையை சுட்டிக் காட்டி ஜாமீன் கோரப்பட்டது. ஆனால் இதை நிராகரித்த மாஜிஸ்திரேட் பிரகாஷ் செப்டம்பர் 9-ந் தேதி வரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அத்துடன் பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே பச்சமுத்துவை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் மனுவை போலீசார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே பச்சமுத்துவின் ஜாமீன் மனு பிற்பகல் விசாரணை நடைபெற்றது. அப்போது பச்சமுத்துவுக்கு ஜாமீன் தர, மாயமான மதனின் தாயார், பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் பச்சமுத்து தரப்பி, புகார்களில் உண்மை எதுவும் இல்லை என வாதிடப்பட்டது.
இதையடுத்து பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications