For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவதூறு வழக்குகள்: ஸ்டாலின், அன்புமணி, விஜயகாந்த் ஆஜராக சென்னை கோர்ட் உத்தரவு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர் உதயகுமார் தொடர்ந்த அவதூறு வழக்குகளில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் நேரில்ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயகாந்த் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். ஸ்டாலின் மற்றும் அன்புமணி மீது அமைச்சர் உதயகுமார் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

Chennai court orders Stalin, Anbumani, Vijayakanth to appear

இந்த அவதூறு வழக்குகளின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 18-ந் தேதியும் அன்புமணி ஏப்ரல் 21-ந் தேதியும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் விஜயகாந்த் ஏப்ரல் 25-ந் தேதியன்று ஆஜராக வேண்டும் என்றும் சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவதூறு வழக்குகள் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே குட்டு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai court has ordered DMK treasurer M K Stalin, PMK's CM Candidate Anbumani and DMDK leader Vijayakanth to appear before the court in a defamation case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X