11 அதிமுக சார்பு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனம் ரத்து.. திமுக வரவேற்பு
டிஎன்பிஎஸ்சியின் 11 உறுப்பினர்களின் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதை திமுக வரவேற்றுள்ளது.
சென்னை: உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் டிஎன்பிஎஸ்பி உள்ள 11 உறுப்பினர்கள் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதற்கு திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வரவேற்றுள்ளார்.
டிஎன்பிஎஸ்சியில் உரிய விதிமுறைப்படி உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை என்று கூறி திமுக, பாமக, மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், டிஎன்பிஎஸ்சியின் 11 உறுப்பினர்களின் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை டி.கே.எஸ். இளங்கோவன் வரவேற்றுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:
டிஎன்பிஎஸ்சில் உள்ள 11 உறுப்பினர்களும் அரசியல் சார்பு உள்ளவர்களாக இருந்தனர். இந்த தீர்பை வரவேற்கிறேன். தமிழக அரசு மீண்டும் தவறுகள் செய்யாமல் இருப்பதற்கான வழியை இந்தத் தீர்ப்பு உருவாக்கி கொடுத்திருக்கிறது. இதனை மீறி தவறு செய்தார்கள் என்றால் மீண்டும் நீதிமன்றத்தால் கண்டிக்கப்படுவார்கள். அல்லது நீதிமன்றம் மீண்டும் அதனை கவனத்தில் கொள்ளும் என்று கருதுகிறேன்.
டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட அனைவரும் அதிமுகவில் தீவிர உறுப்பினர்களாக இருந்தவர்கள். ஒருவர் மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்தவர். மற்றொருவர் அரசு வழக்கறிஞராக இருந்தவர். அவர் மீது அரசு நிலத்தையே அபகரித்துக் கொண்டார் என்ற வழக்கு இருக்கிறது. இன்னொமொருவர் நீதிபதியாக இருந்த போது, நீதிமன்றமே அவர் தகுதியற்றவர் என்று சொல்லப்பட்டவர்.
இப்படி ஒவ்வொருவரும் சந்தேகத்திற்குரிய பின்னணியை கொண்டவர்கள். அதனால்தான் இந்த வழக்கை நான் தொடர்ந்தேன். நான் மனுவில் குறிப்பிட்டக் காரணங்களை ஏற்றுக் கொண்டு நீதிபதிகள் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்துள்ளனர் என்று கருதுகிறேன் என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications