For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்த கோரிய மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி

Google Oneindia Tamil News

Chennai HC dismisses plea seeking repoll in 39 LS constituencies
சென்னை: தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் மறு தேர்தல் நடத்த கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் மறு தேர்தல் நடத்த கோரி சமூக சேவகரான டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 30ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பம் செய்தேன். ஆனால் எனது மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, என் மனுவை பரிசீலித்து தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.ரவிசந்திரபாபு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு மனுதாரர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இது விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

English summary
Chennai high court has dismissed the petition filed by traffic Ramasamy seeking repoll in all the 39 lok sabha constituencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X