இயற்கைச் சீற்றத்துக்கு அரசை குறை கூடாது..மீனவர்களை மீட்க கடற்படைக்கு ஹைகோர்ட் உத்தரவு
நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருக்கும் மீனவர்களை மீட்க கடற்படை, இந்திய கடலோர காவல் படைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : ஓகி புயலின்போது நடுக்கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்க கடற்படை, இந்திய கடலோர படையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 30-ஆம் தேதி ஓகி புயலால் தென் தமிழகமான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களும் தமிழக எல்லையில் உள்ள கேரள பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற தமிழக, கேரள மீனவர்கள் கரை சேரவில்லை.

மீனவர்களை உடனடியாக கண்டுபிடித்துத் தரகோரி நாகர்கோவில், கன்னியாகுமரியில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களை மீட்பது குறித்து மீனவர் நலன் அமைப்பும், வழக்கறிஞர் சூரிய பிரகாசும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், இயற்கை சீற்றங்களின் போது அரசை குறை கூறக்கூடாது. ஓகி புயலால் நடுக்கடலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க கடற்படையும், இந்திய கடலோர காவல் படையும் துரிதப்படுத்த வேண்டும்.
இழப்பீடுகளை நிர்ணயிக்க முடியாது. அறிக்கை தாக்கல் செய்வதால் ஒன்றும் ஆகாது. மீனவர்கள் மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய உதவிகளை மத்திய அரசும், மாநில அரசும் செய்ய வேண்டும். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறி வழக்குகளை முடித்து வைத்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications