"தர்மயுத்தத்துக்கு" எதிர்ப்பு... முதல்வர் மீது நம்பிக்கையில்லாததால் தகுதி நீக்கம்... அடுத்தது என்ன?
முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என அப்போதைய ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என அப்போதைய ஆளுநரிடம் கடிதம் கொடுத்த விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் வழக்கில் இன்று 3-ஆவது நீதிபதி விசாரணை நடத்தினார்.
ஆளுங்கட்சி கவிழுமா தப்புமா என்பதை இந்த வழக்கு நிர்ணயிக்கும் என்பதால் இதன் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்ப்போம்.

- செப். 12, 2017- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி் மீது நம்பிக்கை இல்லை என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர்.
- செப் 14, 2017- 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்புள்ளதாக தினகரன் ஆதரவாளர்கள் தரப்பில் முறையிடப்பட்டதை அடுத்து பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்து நீதிபதி துரைசாமி உத்தரவு பிறப்பித்தார்.
- செப். 19, 2017- தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்எல்ஏ-க்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. செப்.20ம் தேதி பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிப்பு. 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை
- நவ. 2, 2017- அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைத்து நீதிபதி ரவிச்சந்திரபாபு உத்தரவு
- நவ.16, 2017- தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணை துவக்கம்
- ஜன.23, 2018- அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு
- ஜூன் 14, 2018- தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு 3-ஆவது அமர்வுக்கு மாற்றம்
- ஜூன் 18, 2018- 3-ஆவது நீதிபதியாக விமலா நியமனம்
- ஜூன் 26- 17 எம்எல்ஏக்கள் 3-ஆவது நீதிபதி விமலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது. 3-ஆவது நீதிபதியாக சத்யநாராயணன் நியமிக்கப்பட்டு அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
- ஜூலை 4- 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று 3ஆவது நீதிபதி சத்யநாராயணா விசாரணை நடத்தினார். அப்போது இந்த வழக்கை ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி சத்யநாராயணா ஜூலை 23ம் தேதி முதல் 27ம் தேதிவரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications