சேகர் ரெட்டி வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மறுப்பு
சேகர் ரெட்டி வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சேகர் ரெட்டி வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ் ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சட்ட விரோதமாக 34 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கியதாக சேகர் ரெட்டி மீது வழக்கு உள்ளது.

அமலாக்க துறை தன் மீது பதிவு செய்து இருந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி மனு செய்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி எம்.எஸ் ரமேஷ் வழக்கு விசாரணையில் இருந்து பின்வாங்கி உள்ளார். மேலும் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications