..த்தூ.... விஜயகாந்த்தை கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் போராட்டம்
சென்னை: பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது நாகரிகமின்றி காறித் துப்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு விஜயகாந்த் பேட்டியளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிதானமற்றவராக, பத்திரிகையாளர்களைப் பார்த்து காறி துப்பினார். இது கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

விஜயகாந்த்தின் இந்த அநாகரிக செயலுக்கு பல்வேறு பத்திரிகை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனிடையே சென்னையில் இன்று சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விஜயகாந்த்துக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் சென்னை கோயம்பேட்டில் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications