மழை வெள்ளம்... சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியதால் எங்கெங்கும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது

chennai

இந்த பயங்கர தொடர் மழை மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை பல்கலைக்கழக மற்றும் உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று நடைபெற இருந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை விவேகானந்தா கல்லூரியில் இன்று நடக்கவிருந்த தேர்வு 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் சுந்தரவல்லி, கஜலட்சுமி, வீரராகவராவ், ரவிகுமார் ஆகியோர் பிறப்பித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+