மெரினா போராட்ட குழு கெடு முடிந்தது... இனி ஆளுநர் மாளிகை, மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை?
சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த பகல் 12 மணிக்குள் அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திவரும் இளைஞர்கள் கெடு விதித்திருந்தனர். தற்போது கெடு முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக போராட்டத்தை தீவிரப்படுத்த போராட்டகுழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். சென்னை மெரினாவில் ஒரு லட்சத்துக்கும அதிகமான கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என ஏராளமானோர் மூன்றாவது நாளாக இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து மத்திய அரசை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் இயற்ற வலியுறுத்துவதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருந்தார். இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பகல் 12 மணிக்குள் அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என மெரினா போராட்டக்குழு அறிவித்திருந்தது.
அவசர சட்டம் இயற்றாவிட்டால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடையும் என்றும் போராட்டக்குழுவினர் எச்சரித்திருந்தனர். போராட்டகுழுவினர் விதித்த கெடு முடிந்துள்ள நிலையில், இதுவரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் ஆளுநர் மாளிகை மற்றும் மத்திய அரசு அலுவலகங்ளை முற்றுகையிட போராட்டக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications