மீனவர்களே கடலுக்கு போகாதீங்க.. பலத்த காற்று வீசுமாம்.. வானிலை மையம் எச்சரிக்கை
கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி, நெல்லை, கோவை , தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

அதேநேரத்தில் வெப்பசலனம் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் அவ்வபோது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் அடுத்த 24 மணிநேரத்திற்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகடலோர பகுதி மற்றும் புதுச்சேரியில் 50கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என்றும் தென்கடலோர பகுதிகளில் கடல் அலைகள் 3.5 முதல் 4.3மீட்டர் உயரம் வரை எழும் வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு












Click it and Unblock the Notifications