தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது?... மழை எப்படி இருக்கும் தெரியுமா?
Recommended Video

சென்னை: தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் மத்தியில் பருவமழை தொடங்குகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்துக்கு பலனை தரும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலம் வந்துவிட்டது. கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை பொய்த்துவிட்டதால் மக்களும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டனர்.

இதனால் தண்ணீர் பஞ்சமும் விவசாய பயிர்கள் காய்வதும் ஏற்பட்டது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் ஏராளமான தண்ணீர் காவிரிக்கு வந்தது.
இதுகுறித்து சென்னை ஆய்வு மைய அதிகாரி பாலசந்திரன் கூறுகையில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி சிதம்பரம், விழுப்புரம் தலா 9 செ.மீ., பரங்கிப்பேட்டை, கடலூர் தலா 8 செ.மீ., பண்ருட்டி 7 செ.மீ., சேத்தியாதோப்பு, ஆணைக்காரன்சத்திரம் தலா 6 செ.மீ., திருச்சுழி, மாமல்லபுரம் தலா 5 செ.மீ., மயிலாடுதுறை, ஏற்காடு, திருக்கோவிலூர், சென்னை நுங்கம்பாக்கம், மாதவரம், உளுந்தூர்பேட்டை, சீர்காழி, புழல் தலா 4 செ.மீ., சோழவரம், வானூர், தேவலா, மதுரை விமானநிலையம், சாத்தனூர் அணை, தொழுதூர், தாம்பரம், கோவிலாங்குளம், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீபெரும்புதூர், விருதுநகர், செங்குன்றம், விருத்தாசலம், புதுச்சேரி தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத மத்தியில் தொடங்கும். பசிபிக் கடலில் வெப்பம் காரணமாக எல் நினோ நிகழ்வு வடகிழக்கு பருவமழைக்கு சாதகமாக இருக்கிறது. எனவே இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு இருக்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.
இதனிடையே தமிழகத்துக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அதிலும் சென்னை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications