நடிகர் ஜீவாவின் ரூ.1 கோடி நிலத்தை அபகரித்த வழக்கில் பெண் கைது
சென்னை: நடிகர் ஜீவாவுக்கு சொந்தமான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியின் மகனும், நடிகருமான ஜீவா மயிலாப்பூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு தாம்பரம் ராஜ கீழ்ப்பாக்கம் பகுதியில் 2 ஆயிரத்து 697 சதுர அடியில் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

இந்நிலையில் ஜீவா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது,
தாம்பரம் ராஜ கீழ்ப்பாக்கத்தில் கே.எம்.சி. கார்டன் என்ற பெயரில் எனக்கு 2 ஆயிரத்து 697 சதுரடி நிலம் உள்ளது. ரூ. 1 கோடி மதிப்புள்ள அந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு சோபன் என்பவர் போலி பத்திரம் தயாரித்து அபகரித்துக் கொண்டார். இது தொடர்பாக உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சோபனை கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி கைது செய்தனர். மேலும் நில அபகரிப்பில் தொடர்புடைய கோடம்பாக்கத்தைச் சேர்ந்த எலிசா ஆனந்த் என்பவரை போலீசார் தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications