சென்னையில் 2,800 பவுன் தங்க நகைகள் மீட்பு – உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை!
சென்னை: சென்னையில் கடந்த 4 மாதங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் போலீசார் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்தனர். மொத்தம் 405 வழக்குகளில் தொடர்புடைய 504 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களிடம் இருந்து 2800 பவுன் தங்க நகைகள், 37 கிலோ வெள்ளி பொருட்கள், 294 வைரக்கற்கள், ரூபாய் 5 லட்சம் ரொக்க பணம் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதன் மதிப்பு ரூபாய் 80.5 கோடி ஆகும்.

பறிமுதல் செய்யப்பட்ட நகை மற்றும் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

கமிஷனர் ஜார்ஜ் இதில் பங்கேற்று பொருட்களை பறிகொடுத்த உரியவர்களிடம் வழங்கினார். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் குறிப்பாக நகைகள் அனைத்தும் கமிஷனர் அலுவலகத்தில் கீழ்த்தளத்தில் உள்ள 2 அறைகளில் ஹாலில் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது. கமிஷனர் அலுவலக வளாகம் நகைகடை போல் காட்சி அளித்தது.

நகை உரிமையாளர்களும், அதனை வாங்குவதற்காக வந்து இருந்தனர். அனைவரும் தனித்தனியாக அமர வைக்கப்பட்டு இருந்தனர்.

கடந்த ஆண்டை விட 15 சதவீதம் குற்றங்கள் குறைந்து உள்ளது. கடந்த அண்டு 74 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 64 வழக்குகள் பதிவாகி உள்ளன.

செயின் பறிப்பு வழக்கை பொறுத்தவரை கடந்த ஆண்டு 506 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளது. இந்த ஆண்டு 389 வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டு 163 கொலைகள் நடந்து உள்ளன. இந்த ஆண்டு இதுவரை 125 கொலை சம்பவங்கள் நடந்து உள்ளது.

சென்னை நகரில் 1748 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு இதே சட்டத்தில் 1601 பேர் மீது மட்டுமே குண்டர் சட்டம் பாய்ந்தது.
-
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications