For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8 வழி விரைவு பசுமைசாலை: நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு- மூதாட்டியை கைது செய்த சேலம் போலீஸ்

8 வழிசாலைக்கு நிலம் தர மறுத்த மூதாட்டியை போலீஸ் கைது செய்தனர்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    8 வழி சாலையை எதிர்க்கும் மக்களை அதிகாலை கைது செய்த போலீஸ்

    சேலம்: 8 வழி விரைவு பசுமை சாலைக்காக தமது மலை அடிவார நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்த மூதாட்டியை சேலம் போலீசார் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம்- சென்னை 8 வழி விரைவு பசுமைவழி சாலை அமைக்க ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இது சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    Chennai-Salem Express Highway: Elderly Woman arrest by Salem Police

    தங்களது ஒப்புதல் இல்லாமல் நிலத்தை அளவெடுப்பதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படி எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களை குடும்பத்துடன் கைது செய்து வருகிறது.

    இதேபோல் சேலம் அடிமலைப்புதூரில் மலை அடிவாரத்தில் இருக்கும் தம்முடைய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என மூதாட்டி ஒருவர் நிலத்தில் விழுந்து புரண்டு கதறினார். ஆனால் அவரது கதறலை போலீசார் பொருட்படுத்தவில்லை.

    போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் அந்த மூதாட்டியையும் போலீசார் கைது செய்துள்ளனர். முதியவர்கள் என்றும் பார்க்காமல் கைது நடவடிக்கை தொடருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    A Elderly Woman was arrested by Salem Police for refused to give the land to the Chennai-Salem Express Highway project.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X