சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் டிச.13 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் டிசம்பர் 13ம் தேதிவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கடந்த நவம்பர் 30ம் தேதி முதல் பிற்பகல் முதல் இடைவிடாது பெய்த கனமழையை தொடர்ந்து மீட்பு பணிகளும் நிவாரணங்களும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. நகரின் பல பகுதிகளில் குப்பைகளும், சேறும் சகதியும் நிறைந்துள்ளன. பல மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ள துப்புரவு பணியாளர்கள் இரவு பகலாக குப்கைகளை அகற்றி வருகின்றனர்.
வெள்ளத்தில் வீடுகளை இழந்த பலரும் பள்ளி, கல்லூரிகளில் தங்கியுள்ளனர். நிவாரண முகாம்களாக பள்ளிகள் செயல்படுகின்றன. எனவே வெள்ளம் வடிந்துள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் படிப்படியாக தங்களின் இருப்பிடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.

டிசம்பர் 13 வரை விடுமுறை
மழையால் பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி வளாகங்களை தூய்மைப்படுத்த வேண்டிய பணி உள்ளது. எனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 13ம் தேதிவரை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்

தேர்வுகள் ஒத்திவைப்பு
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 14 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அம்பேத்கர் சட்டக் கல்லூரி தேர்வுகள் டிசம்பர் 13 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதே போல் தன்னாட்சி அதிகாரம் கொண்ட கல்லூரிகளைத் தவிர, பிற கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர் விடுமுறை
தொடர்மழை காரணமாக கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் 25ம் தேதிவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நவம்பர் 26ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 3 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்பட்ட நிலையில் நவம்பர் 30ம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதுவே முதல்முறை
மழை வெள்ளத்திற்காக தமிழகத்தில் ஒரு மாதம் வரை தொடர் விடுமுறை விடப்படுவது இதுவே முதன்முறையாகும். அரையாண்டு தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதும் இதுவே முதன்முறையாகும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications