சுதந்திர தின கொண்டாட்டம்.... கோலாகலத்துடன் தயாராகும் புனித ஜார்ஜ் கோட்டை
சென்னை: சுதந்திர தின கொண்டாட்டத்துக்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டை தயாராகி வருகிறது. விழாவையொட்டி, கோட்டை கொத்தளப் பகுதியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் 69வது சுதந்திர தின விழா, வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் சிறப்பான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜொலிக்கும் கோட்டை
சுதந்திர தின விழாவுக்காக தலைமைச் செயலக கட்டிடம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கொடிக் கம்பம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டை எதிரில் உள்ள பகுதியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

ஒத்திகை நிகழ்ச்சி
சுதந்திர தின நிகழ்ச்சிக்கான ஒத்திகை கடந்த 6ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று காலையும் ஒத்திகை நடத்தப் பட்டது. விழாவையொட்டி, கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோட்டையில் கொடி
ஆகஸ்ட் 15ம்தேதியன்று காலை 8.50 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஜெயலலிதா ஏற்றி வைக்கிறார். பின்னர் முப்படை வீரர்கள் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார்.

விருதுகள்
அதைத் தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், சிறப்பு விருதுகளுக்கு அரசால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது மற்றும் பதக்கங்களை முதல்வர் வழங்குகிறார்.

உளவுத்துறை எச்சரிக்கை
சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது நாச வேலையில் ஈடுபட தீவிரவாதிகள் திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் அனைத்து மாநில போலீசாருக்கும், எச்சரிக்கை தகவல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

பாதுகாப்பு தீவிரம்
இதையடுத்து தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மாநகர் முழுவதிலும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

5 அடுக்கு பாதுகாப்பு
கோட்டையை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கைகளை கடந்த 10ம்தேதியில் இருந்தே போலீசார் தொடங்கி விட்டனர். நகரின் முக்கிய இடங்கள் அனைத்திலும் உள்ள ஆயிரக்கணக்கான லாட்ஜுகள் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

விடிய விடிய சோதனை
தி.நகர் ரங்கநாதன் தெருவில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்படுகிறது. போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் சென்னை மாநகர் முழுவதும் விடிய விடிய சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications