இரண்டரை வயது குழந்தையை கடத்திய 14 வயது சிறுவன்... சென்னையில் 'ஷாக்' சம்பவம்!
சென்னை தண்டையார்பேட்டையில் கடத்தப்பட்ட இரண்டரை வயது சிறுவனை 14 வயது சிறுவன் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை : தண்டையார்பேட்டை பகுதியில் நேற்று மாயமான இரண்டரை வயது ஆண்குழந்தையை 14 வயது சிறுவன் கடத்திச் சென்ற சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் மகமது இலியாஸ். இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே சாலையோரத்தில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரது இரண்டரை வயது மகன் முகமது சாது நேற்று முன்தினம் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது கடத்தப்பட்டான்.

ஒரு நாள் கடந்த பின்னரும் குழந்தை முகமதுவைப் பற்றி எந்தத் தகவலும் தெரியாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவலையடைந்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சிறுவனை போலீசார் தேடி வந்தனர். அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்த 14 வயது சிறுவன் ஒருவன் முகமதுவை சைக்கிளில் அமர வைத்து அழைத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் கடத்தப்பட்ட பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் முகமதுவை சிறுவன் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அந்த வீட்டை கண்டுபிடித்து முகமதுவை மீட்டனர். ஆனால் முகமதுவுடன் விளையாடவே அழைத்து சென்றதாக சிறுவன் கூறுகிறான்.
எனினும் இதில் போலீசாருக்கு சந்தேகம் வந்தது, ஏனெனில் அந்தச் சிறுவன் தனது சைக்கிளின் நிறத்தை நேற்று மாற்றியுள்ளான். எனவே போலீசார் கடத்திய சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் 14 வயது சிறுவனின் பெற்றோரும் உடந்தையாக இருந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications