நவராத்திரி பண்டிகை: கோவில்களில் கொலு, கோலாகலம்
சென்னை: சென்னை மயிலாப்பூரில் நவராத்திரி பண்டிகையை களை கட்டியுள்ளது. அங்குள்ள சிவன், அம்மன் ஆலயங்களில் கொலுவைத்து கொண்டாடி வருகின்றனர்.
நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்கள் ஒன்பது படிகள் வைத்து கொலு பொம்மைகள் அமைத்து தினசரி பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
புரட்டாசிமாதத்தில் 9நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரியாகும்.நவம் என்பது ஒன்பதை குறிக்கும். அந்தவகையில் அன்னை சக்திதேவியை 9நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் மக்கள் வழிபடுகின்றனர்.
மகிஷாசுரனை தேவியானவள்9நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடியநாளே விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. அரக்கன் மகிஷா சுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்ற நாளே விஜயதசமியாகும்.

நலம் தரும் நவராத்திரி
மகஷனை எதிர்த்து அம்மன் போரிட்ட 9 நாள்களையும் குறிக்கும் வகையில் கொலுவைத்து அம்மனை வழிபடுகின்றனர். சென்னை மயிலாப்பூரில் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி கடந்த 5ம் தேதி தொடங்கியது.

6ம் நாள் பண்டிகை
அங்குள்ள கபாலீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், காரணீஸ்வரர், முண்டகக்கண்ணியம்மன், கோலவிழியம்மன் ஆலயங்களில் நவராத்திரியை ஒட்டி உற்சவர் அம்மனை அலங்கரித்து கொலுமண்டபத்தின் முன் வைத்து வழிபாடு நடத்தினர்.

கலைவிழா உற்சாகம்
நவராத்திரியை ஒட்டி சிறுவர் சிறுமியர்கள் அம்மனைப் போல அலங்கரித்தும், ஆடல் பாடலுடன் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், சுண்டல் பிரசாதம் அளிக்கப்பட்டது.

வெற்றி தரும் விஜயதசமி
9நாட்களும் விரத மிருந்து வழிபடுவோர், 10ம் நாள் அன்னையின் வெற்றியை கொண்டாடி விரதத்தை முடித்துகொள்வதை வழக்கமாக கொண்டிருகிறார்கள். விஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள் என பொருள்படும்.

மாணவர்களே பொம்மைகளா
திருப்புவனம் வேலம்மாள் சிபிஎஸ்இ பள்ளியில் நவராத்திரியை முன்னிட்டு மழலையர்கள் கொலு பொம்மைகளாக வேடமணிந்து வீற்றிருந்த காட்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. மழலையர்களுக்கு மீனாட்சி, சிவபெருமான், முருகன், விநாயகர், தன லட்சுமி என பல்வேறு வேடங்கள் அணிந்து கொலு பொம்மைகளாக வேடமணிந்து கொலு அமைத்திருந்தனர்.

இந்திரா காந்தி கல்பனா சாவ்லா
சாதனை பெண்மணிகளான இந்திராகாந்தி, கல்பனாசாவ்லா உள்ளிட்ட பெண்களை போலவும் வேடமணிந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். மழலையர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சியும் பார்வையாளர்களை கவர்ந்தது.

நல்ல காரியங்கள் நடக்கும்
குழந்தைகளுக்கு விஜய தசமி அன்று ஆரம்பக்கல்வியை ஆரம்பித்து வைப்பது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மேலும் விஜய தசமி அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றிதரும் என்பது ஐதீகம்.

உற்சாகப் பண்டிகை
நவராத்திரி பண்டிகை இந்தியா முழுவதும் வெவ்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் தசரா பண்டிகையாகவும், வடமாநிலங்களில் துர்கா பூஜாவாகவும் உற்சாகமாகக் கொண்டாப்படுகிறது
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications