மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம் தானம்: இரவில் பறந்த இதயம்
சென்னை: சென்னையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம் முதியவர் ஒருவருக்கு தானம் செய்யப்பட்டது.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சாலை விபத்தில் காயம் அடைந்து மெகருன்னிசா (38) என்ற பெண் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர்.
ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இதயம் பழுதடைந்து உயிருக்கு போராடிய ஒரு முதியவருக்கு மெகருன்னிசாவின் இதயத்தை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக டாக்டர்கள் குழுவினர் மெகருன்னிசாவின் உடலில் இருந்து இதயத்தை பிரித்து எடுத்தனர். அந்த இதயத்தை விரைவாக கொண்டு செல்ல போக்குவரத்து போலீசாரின் உதவி கோரப்பட்டது.
போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் சிவானந்தம் தலைமையில் பெரும்பாக்கத்தில் இருந்து கிரீம்ஸ் ரோடு வரை போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது.
மொத்தம் 24 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த பாதையில் 16 சந்திப்பு சிக்னல்கள் உள்ளன. ஒவ்வொரு சந்திப்பிலும் 3 போலீசார் வீதம் நிறுத்தப்பட்டனர்.
இரவு 9.30 மணிக்கு இதயம் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டது. சரியாக 23 நிமிடத்தில் அந்த ஆம்புலன்ஸ் கிரீம்ஸ் ரோட்டுக்கு வந்து சேர்ந்தது.
அதை தொடர்ந்து அந்த இதயம் முதியவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications