தோசைக்கு மாவாட்டியபோது கிரைண்டரில் துப்பட்டா சிக்கி பெண் பரிதாப பலி
சென்னை: வெட் கிரைண்டரில் தோசைக்கு மாவாட்டியபோது துப்பட்டா கிரைண்டரில் சிக்கிக் கொண்டதால் இளம் பெண் பரிதாபமாக உயிரழந்துள்ளார். சென்னையில் இந்த விபரீதம் நடந்துள்ளது.
அந்தப் பெண்ணின் பெயர் ஹெப்சிபா. 24 வயதான இவரும், இவரது தாயார் முத்துலட்சுமியும், அரும்பாக்கம் ரஸ்ஸாக் கார்டன் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை தனது தாயார் முத்துலட்சுமியுடன் அவர் இட்லிக்கு மாவாட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கிரைண்டரில் திடீரென ஹெப்சிபாவின் துப்பட்டா சிக்கிக் கொண்டது. கிரைண்டர் வேகமாக சுற்றியதால் துப்பட்டாவும் வேகமாக சுற்றி ஹெப்சிபாவின் கழுத்தை நெறுக்கி விட்டது.

மின்னல் வேகத்தில் நடந்த இந்த விபரீதத்தில் ஹெப்சிபா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அவரது தாயார் இந்தக் காட்சியைப் பார்த்து அலறவே அனைவரும் ஓடி வந்தனர். ஹெப்சிபாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு ஓடினர். ஆனால் அவர் ஏற்கனவே கழுத்து இறுகி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பின்னர் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அமைந்தகரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஹெப்சிபாவுக்கு கடந்த 3 வருடத்துக்கு முன்புதான் திருமணமானது. அவருக்குக் குழந்தை எதுவும் இல்லை. மதுரவாயலில் வசித்து வந்தார். ஹெப்சிபாவுடன் அவரது தாயாரும் வசித்து வந்தார். இருவரும் வீட்டுப் பொருளாதாரம் சரியில்லாததால், 3 மாதங்களுக்கு முன்புதான் இந்த கேன்டீனில் வேலைக்குச் சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications