போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தாக்குவதா.. கண்டித்து சென்னையில் பொதுமக்கள் சாலை மறியல்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து சென்னையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்துவதா என்று கொந்தளித்த பொதுமக்கள் சென்னையின் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கோரி உறுதியான போராட்டத்தை தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் நடத்தி வந்தனர். அவர்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கியும், தடியடி நடத்தியும் போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி மற்றும் கல்வீச்சை போலீசார் நடத்தினார்கள். இதனால் சென்னையில் உள்ள பொதுமக்கள் வெகுண்டெழுந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அறவழியில் அமைதியாக போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள் மீது எப்படி தடியடி நடத்தலாம் என்று கேள்வி கேட்டு பொதுமக்கள் தன்னெழுச்சியாக ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் கோடம்பாக்கம், கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போன்று தரமணியில் டைடல் பார்க் முதல் சோழிங்கநல்லூர் வரை ஆங்காங்கே சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளிலும் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, இந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, பதற்றமும் நிலவி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications