சிதம்பரம் இரட்டை கொலை வெளியூர் கூலிப்படையின் வெறிச் செயல்: விசாரணையில் திடுக் தகவல்
சிதம்பரம்: சிதம்பரத்தில் வீடு புகுந்து அண்ணன், தம்பியின் தலையை துண்டித்து கொன்ற வழக்கில் 4 பேர் சரண் அடைந்துள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை நகர் கலுங்குமேட்டைச் சேரர்ந்தவர்க்ள் ஆம்புலன்ஸ் குமார்(34), அவரது தம்பி ராஜேஷ்(32). விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள். கடந்த 2ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு மர்ம கும்பல் ஒன்று பைக்குகளில் அங்கு வந்து வீடு புகுந்து குமார் மற்றும் ராஜேஷை வெட்டிக் கொலை செய்தது. அந்த கும்பல் அவர்களின் தலையை வெட்டி அருகில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாசலில் வைத்துவிட்டு சென்றது.
அந்த கும்பல் வெடிகுண்டுகளை வேறு வீசிவிட்டுச் சென்றது. இந்த குண்டுவீச்சில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே குமாருக்கும் பிரபல ரவுடி மண்ரோடு சந்திரனின் தம்பி ஹரிக்கும் ஏற்பட்ட முன்விரோதம் தான் இந்த இரட்டை கொலைக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ஹரியின் கூட்டாளிகளான அண்ணாமலைநகர் மண்ரோட்டை சேர்ந்த கஜேந்திரன்(29), அண்ணாமலைநகர் சிவன்கோவில் தெருவை சேர்ந்த பட்டாபி என்கிற பட்டாபிராமன்(25), அவரது தம்பியான சிவபுரி தென்பாதியை சேர்ந்த மணி என்கிற சிவமணி(24), ராஜா முத்தையா செட்டியார் மருத்துவமனை ரோட்டை சேர்ந்த பத்தாயிரம் என்கிற வெங்கடேசன்(30) ஆகியோர் போலீசில் புதன்கிழமை சரண் அடைந்தனர்.
அவர்கள் நான்கு பேரும் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக அவர்கள் விசாரணையில் கூறுகையில்,
நாங்கள் குமார் மற்றும் அவரது தம்பியை கொலை செய்யவில்லை. வெளியூரில் இருந்து ரவுடி கும்பல்களை வரவழைத்து தான் செய்தோம். வெளியூர் கூலிப்படையினருக்கு குமாரின் வீட்டை காட்ட தான் நாங்கள் அங்கு சென்றோம். தூத்துக்குடி மாற்றம் நாகை ஆகிய மாவட்டங்களில் இருந்து ரவுடிகள் வரவழைக்கப்பட்டனர் என்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications