குஜராத், இமாச்சலில் பாஜக வெற்றி வாகை.. பிரதமருக்கு போனில் வாழ்த்து சொன்ன எடப்பாடியார்!
குஜராத் மற்றும் இமாச்சலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: குஜராத் மற்றும் இமாச்சலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் மற்றும் ஹிமாச்சல் சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் இரு மாநிலங்களிலும் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இதனால் குஜராத்தில் பாஜக 6வது முறையாக ஆட்சி பீடத்தில் அமருகிறது. ஹிமாச்சல் பிரதேசத்தில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ் வசம் இருந்த ஆட்சி பறிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியமைக்கிறது.
இரு மாநில தேர்தல்களிலும் பாஜக ஆட்சியமைக்க இருப்பதை தொடர்ந்து அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புகொண்டு போனில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications