For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழல் குற்றச்சாட்டுகளில் நழுவ அமைச்சர்கள் பிளான்.. பி.ஏ.க்கள் மூலம் பெரிய டீலிங்.. பரபர தகவல்கள்

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழக அமைச்சர்கள் சிக்குவதால் அரசுக்கு ஆபத்து என்பதை உணர்ந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதுகுறித்து அமைச்சரவை சகாக்களுக்கு எச்சரித்துள்ளார்.

மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு மாறிவிட்டதாக வரும் குற்றச்சாட்டுகளுக்கு மூல காரணம், கட்சியிலுள்ள முக்கியஸ்தர்களின் ஜாதகமே சிபிஐ மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கையில் இருப்பதுதான்.

எனவே எடப்பாடி பழனிச்சாமி தனது சகாக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்வைஸ்

அட்வைஸ்

லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளில் ஆதாரபூர்வமாக யாரும் சிக்கிக்கொள்ளக்கூடாது என அமைச்சர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் எடப்பாடி. அமைச்சர் சரோஜா மாட்டியதிலிருந்து இந்த அட்வைஸ் செய்யப்பட்டு வருகிறது.

உஷார்

உஷார்

இதனால் அமைச்சர்கள் எல்லோரும் உஷாராகியிருக்கிறார்கள். குறிப்பாக, ஜூனியர் அமைச்சர்கள் . இந்த நிலையில், மூத்த அமைச்சத்கள் முதல் ஜூனியர் அமைச்சர்கள் வரை டீலீங் பேசுவதை தங்களின் பி.ஏ.க்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

டீலிங்குகள்

டீலிங்குகள்

பெரிய பெரிய நிறுவனங்கள் மற்றும் தங்களுக்கு நேரடியாக தெரிந்த நபர்களிடம் மட்டுமே டீலிங்கை அமைச்சர்களே மேற்கொள்கிறார்கள். மற்றபடி, பி.ஏ.க்கள் மூலமாகவே நடக்கிறது. இதனால் கோட்டையில் பி.ஏ.க்களின் டீலிங் ராஜ்ஜியம் கொடிகட்டிப்பறக்கின்றன.

இதையும் விடமாட்டார்களே

இதையும் விடமாட்டார்களே

இதை மத்திய உளவுத்துறையும் மோப்பம் பிடித்து வைத்துள்ளது. எந்த வகையில் போனாலும் அங்கெல்லாம் குழிபறித்து, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை கவனத்திற்கு அதை கொண்டு செல்ல தயங்காது என்றே தெரிகிறது.

English summary
Chief Minister Edappadi Palanisamy, who realizes that Tamilnadu ministers are at risk of corruption in the scam, warns cabinet colleagues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X